முழங்கால் படியிட்டு இயேசுவை
muzhangaal padiyittu yesuvai
முழங்கால் படியிட்டு இயேசுவை நோக்கி தினமும் ஜெபித்திடுவோம் ஜெபித்து ஜெயம் பெறுவோம் நாம் --அல்லேலூயா
இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும் இயேசுவின் வார்த்தையில் நிலைக்கவேண்டும் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்து ஜெயம் பெறுவோம்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் சோதனை யாவும் சகிக்க வேண்டும் யாக்கோபை போல இராமுழுவதும் போராடி ஜெபித்து ஜெயம் பெறுவோம்
மன்றாடி தினமும் ஜெபிக்கவேண்டும் மன்னவர் அருளை பெற்றிட வேண்டும் மோசேயைப் போல கொடு முடியில் மன்றாடி ஜெபித்து ஜெயம் பெறுவோம்