முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே
muthoodhu ulagengum muzhangidudhae
பல்லவி
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீ?
இனி காலம் செல்லாதே யேசு வருவார் இனிமேலும் காலத்தை நீ வீணாக்கிடாதே.
1. நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது நியாய சங்கங்கள் அனைத்தும் உட்கார்ந்தது - தேவன் நீண்ட ஆயுசுள்ளவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தார் நீதிபரன் யேசுவும் அவருடன் வந்தார்.
பல்லவி
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீ?
2. படைத்தவற்றை வணங்குவதை ஒழித்து விட்டு படைத்தவரை வணங்குவதை இன்றே நீ செய் - தேவன் தேவனுக்குப் பயந்து மகிமைப் படுத்திடு தேவ ராஜ்யம் செல்ல இன்றே ஆயத்தமாகு.
3. பாபிலோன் மகா நகரம் விழுந்து விட்டது பாவத்தின் உச்ச நிலையை அடைந்து விட்டது - அந்த மாயையான போதகத்தின் மதுவைக் குடிக்க வைத்து மாந்தர் அனைவரையும் மயக்கி விட்டாளே.
4. மிருகத்தின் சொரூபத்தை வணங்குபவர்க்கும் மிருகத்தின் முத்திரையைத் தரிப்பவர்க்கும் - கள்ள ஆட்டுக் குட்டியானவர் முன் அக்கினி கந்தகத்துடன் அவருடைய கோபமது காத்திருக்குதே.
5. இயேசுவின் விசுவாசத்தை அடைந்தவரும் இயேசுவைப் பற்றின சாட்சி உடையவரும் - எந்தன் பத்து கற்பனைகளுக்குக் கீழ்படிந்து நடப்போரும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்.