முன்னேறிச்செல்வோம்
munnericchelvom
முன்னேறிச்செல்வோம் செயல்வீரரே விசுவாசம்தான் நம் ஜெயமே
1.சாத்தானின் அம்புகள் சீறினாலும் சதிகார வம்புகள் மீறினாலும்-2 அதிகாரம் எல்லாமே இயேசுவுக்கே-2 அவர் பின்னே செல்லுவோம் வெற்றி நமக்கே அல்லேலுயா-4.
2.தேசத்தின் தேவையை தெரிந்துகொண்டோம் இயேசுவின் நேசத்தால் நெருக்கப்பட்டோம் விசுவாசக் கேடகம் சாய்வதில்லை-2 துளி ரத்தம் உள்ளவரை ஓய்வதில்லை அல்லேலுயா-4.
3.பரிசுத்தர் பாசறை நிரம்பட்டுமே பரலோக ராஜ்ஜியம் பரவட்டுமே மானிட யுக்திகள் மறையட்டுமே-2 விசுவாச சந்ததி பெருகட்டுமே. அல்லேலுயா-4