முன் சிறு சாமுவேல் கர்த்தாவின் சத்தத்தைக்
mun siru saamuvel karthaavin sathathaik
1. முன் சிறு சாமுவேல் கர்த்தாவின் சத்தத்தைக் கேட்டவர் வாக்கின் மேல் வைத்தான் பேர் வாஞ்சையை மெய்த் தேவனோடு பேசினான் (2) ஆனந்தக் களிப்படைந்தான்.
2. யோகோவா நேசராய் என்னோடு பேசினால் நான் கேட்டுப் பக்தியாய் பூரிப்பேன் அதினால் மா சுத்தர் என்று உணர்வேன் (2) எப்பாவத் தீங்கும் வெறுப்பேன்.
3. அவ்வாறே பேசாரோ ஆம்! சத்ய வேதத்தில் அழைக்கிறார்! இதோ! தம் பாதத்தண்டையில் மெய் வேதம் எங்கும் தேடிப்பார் (2) வா! நீசப் பாவி! என்கிறார்.
4. அப்பாலன் போலவே மா வாஞ்சையாய்ச் சொல்வேன் "கர்த்தாவே பேசுமே! அடியேன் கேட்கிறேன்". தேவாலயத்தில் தொழுவேன் (2) நல் வார்த்தை கேட்க வாஞ்சிப்பேன்.