முன் செல்லும் மேகமே
mun sellum megamae
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே மகிமையின் மேகமாய் என்னை வந்து மூடுமே (2)
ஆவியானவரே (4) உம் செட்டையினால் என்னை மூடும் உம் சிறகுகளால் என்னை மறையுமே ஆவியானவரே – (2)
1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2) முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)
ஆவியானவரே – (4) உம் வார்த்தையினால் இன்று பேசுமே திருவசனத்தால் பெலன் தாருமே ஆவியானவரே (2)
2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2) சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய் மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)
ஆவியானவரே – (4) எங்கள் சபையிலே நீர் வாருமே எம்மை மறுரூபமாக்கடுமே ஆவியானவரே – (2)