முள்முடி சூடிய ஆண்டவர்
mulmudi soodiya aandavar
முள்முடி சூடிய ஆண்டவர் நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு பாடுகள் சுமந்தார்
நம் பாவம் தீர்க்க பலியானார் இரத்தம் சிந்தி மீட்டார் கள்ளனைப் போல கட்டுண்டாரே உந்தனை மீட்டிடவே
வாரினாலே அடிக்கப்பட்டார் பாவி எனக்காக ஆபத்திலே துணையாக எம்மைக் காரும் தேவா
கால் கைகளிலே ஆணிபாய முட்கிரீடம் பின்னி சூட தாசர்களை காத்த இயேசு பலியாக மாண்டாரே