முள்மூடி முடி சுமந்து
mulmoodi mudi sumandhu
முள்மூடி முடி சுமந்து-நீர் முதுகில் சிலுவைகொண்டு கல்வாரி மலைமீது-நீர் தள்ளாடி நடந்தது ஏன் பொல்லாத மானிடரை-நீர் இரட்சிக்க வந்தீரோ
கர்த்தாவே கதறுகின்றேன்-அந்தக் காட்சியை நினைக்கின்றேன் கல்லான இதயங்களில்-கண்ணீர் வந்விடவில்லை ஜயா
இங்கு கல்லான இதயங்களில்-கண்ணீர் வந்திடவில்லை ஜயா கண்கெட்ட குருடர்களும்- உமது கைதொட்டு சுத்தமாகினார் குஷ்டம் வந்த ரோகிகளும்-உமது கைதொட்டு சுத்தமாகினார் செத்தவரும் எழுந்திருந்து-தேவா
உன் சத்தத்தைக் கேட்டனரே-அன்று செத்தவரும் எழுந்திருந்து-தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே அத்தனையும் செய்த உம்மை-பின்பு சித்ரவதை செய்தது ஏன்
கர்த்தாவே கதறுகிறேன்-அந்தக் காட்சியை நினைக்கின்றேன் கல்லடியும் கசையடியும்-வாயச் சொல்லடியும் ஏற்றது ஏன்
ஜயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய் இவற்றைத் தாங்கித் தவித்தீரோ இன்னும் நாம் உணரவில்லை-மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை