முள் கிரீடம் சூடி தோளில்
mul kireedam soodi tholil
முள் கிரீடம் சூடி தோளில் சிலுவையுடன் பாவியாம் நம்மின் துரோகங்கள் மாற்ற மன்னவன் செல்கின்றேரே ( கொல்கொதா )
ஆத்தும் தாகம் கொண்டவராய் ஆண்டவர் நம்மையும் நோக்குகின்றார் நீதியாம் பாதை நேர் வழி காட்ட நொந்து முன் செல்கின்றாரே
மண்ணுள்ள மாந்தர்க்கு மீட்பராம் மன்னிப்பு மாட்சிமை ஈந்தவராம் எண்ணில் அடங்கா பாவங்கள் தீர கண்ணீர் நீ சிந்துவாயோ