முடியாது என்று யார்சொல்ல
mudiyaadhu endru yaarsolla
முடியாது என்று யார்சொல்ல கூடும் , முடியுமே நடக்குமே என் தேவனலே - 2
நிமிரமுடியா கூனி அன்று நிமர்ந்தாளே உம்மாலே நடக்க முடியா முடவன் அன்று நடந்தானே உம்மாலே - 2
உம் நாமம் சொன்னாலே எல்லாமே என் வாழ்வில் ஜெயமாக நடக்கின்றதே - 2. முடியாது
பார்வை இல்லா பர்த்திமேயு பார்த்தானே உம்மாலே மரித்துப் போன வாசருவும் பிழைத்தானே உம்மாலே - 2
உன் நாமம் சொன்னாலே எல்லாமே என் வாழ்வில் ஜெயமாக நடக்கின்றதே - 2 முடியாது என்று யார் சொல்லக் கூடும் முடியுமே, நடக்குமே என் தேவனாலே - 2