முடிவு உண்டு முடிவு உண்டு
mudivu undu mudivu undu
முடிவு உண்டு முடிவு உண்டு நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது-உன்
1.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் செழித்திடும் ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையாலே பிழைத்திடுவான் கலங்காதே நீ திகையாதே கண்ணீரை துடைக்கும் தேவன் உன்னோடு
2.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் பாக்கியவான் தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல வளர்ந்திடுவான் கலங்காதே நீ திகையாதே காண்கின்ற தேவன் உன்னோடு உண்டு
3.கர்த்தரை நம்பு மனிதன் தப்பாமல் கனிதருவான் மழையில்லா வருஷத்திலும் பசுமையாக வளர்ந்திடுபான் கலங்காதே நீ திகையாதே காண்கின்ற தேவன் உன்னோடு உண்டு
4.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் மகிழுந்திருப்பான் ஜீவ தண்ணீர் ஊற்றினிலே பாடி ஆடி சுகித்திருப்பான் கலங்காதே நீ திகையாதே கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு