முடிவில்லாதவரே
mudivillaadhavarae
முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே-2 என் விண்ணப்பத்திற்கும் என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே-2
புகலிடமே என் மறைவிடமே சமாதானமே சம்பூரணமே ஆறுதலே என் அக்களிப்பே உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2
1.இதுவரை நடத்தின எபினேசர் நீரே எந்நாளும் நடத்திடுவீர் இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே என்றென்றும் காத்திடுமே-2-புகலிடமே
2.ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே வழுவாமல் காத்திடுவீர் ஒருவராய் பெரிய காரியம் செய்வீர் ஒத்தாசை அனுப்பிடுவீர்-2 -புகலிடமே
3.உன்னதமானவர் மறைவில் இருப்பதால் வல்லவர் நிழல் தங்குவேன் அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன் என்றே நான் சொல்லிடுவேன்-2-புகலிடமே