முடிவில்லாத நித்திய ஜீவனை
mudivillaadha nithiya jeevanai
முடிவில்லாத நித்திய ஜீவனை முடிவில்லாதவர் உனக்களிப்பார்
சத்திய பாதையில் அவருடன் நடந்தால் நித்திய ஜீவனை நீ பெறுவாயே நித்திய காலமாய் வாழ்ந்திடுவாய்
பரமனின் பாதம் பற்றியே நடந்தால் வரங்களின் ஆசீர் அளித்திடுவார் கரங்களினால் உன்னை அணைத்தெடுத்தே பரன் அவர் என்றென்றும் வாழவைப்பார்
கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன் கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி நாதனை நிதம் துதி செய்திடுவாய்