முடிவேயில்லை உம்
mudiveyillai um
முடிவேயில்லை உம் ஆண்டுகள் போல் இயேசுவே அடியிலே நின் திரு கிருபை நீடித்தே நிலைத்திடுதே
1. மருவில் நீர் நீரோடையாய் வருவீர் என் தாகந்தீர்ப்பீர் நின் ரூபம் நோக்க மனம் இன்னும் காவினில் கதறிடுதே - முடி
2. அரசே நான் அபிஷேகத்தால் சிரசாய் தீர்ந்தீரே சபையின் ஜீவன் மா பெலனாய் ஜீவ ஆவியே எழுந்தருள்வீர் - முடி
3. பகரும் நின் வரங்களையே உகந்தும்மில் ஸ்திரப்படவே அப்போஸ்தலர் காலம் போல் இப்போ சந்திப்பீர் எழுப்புதலால் - முடி
4. தற்பரா நின் சிறப்புரைக்க அற்புதங்கள் நடைபெறவே உவந்தும்மை சேவிக்க நவ ஜீவியோர் எழுப்பிடுமே - முடி
5. நற்பிதாவின் திருகுணங்கள் நிறைந்த புரிய சீயோனே சொந்தமாய் கொள்ள தன்னை தந்த காலங்கள் இன்னுமெத்தனை - முடி