முதலாவது எதிலும் முதலாவது
mudhalaavadhu edhilum mudhalaavadhu
முதலாவது! எதிலும் முதலாவது! எங்கும் முதலாவது! இயேசுவே முழு முதலாவது! முதல் முதலாவது முழு முதலாவது! - 2 எதிலும் எங்கும் முதல் முதலாவது - 2 என்றென்றும் இயேசுவே முழு முதலாவது - 2
1. ஆரம்பம் நீர்தானது ஆக்கல் உம் செயல்தானது ஆளுமை மேலானது! - உம் மாட்சிமை இணையற்றது! ஞாலமும் உமதாமே அகிலமே உமதாமே - 2 என்றும் எல்லாமே உம் சொந்தமானதே -முதல்
2. வாழ்வு உமதானது ஆற்றலும் நீர் அளிப்பது என் ஆசை நீர் தானது! அழகும் நீர் தந்தது! அறிவும் நீர்தாமே வெற்றியும் நீர்தாமே - 2 மகிழ்வும் வளமும் நீரன்றி வேறேது- முதல்
3. இயேசு நீர் வாழ்கவே என் இதயத்தில் நீர் வாழ்கவே சிந்தையை நீர் ஆளுமே என் தேகமும் உமதாகுமே! ஆவி புகழ்பாட எல்லாம் நீராக - 2 தரணியின் மனிதரெல்லாம் உம்பாதம் சரணாக -