மோட்ச மண்டலத்திலுள்ள மாட்சிமை
motsa mandalathilulla maatsimai
1. மோட்ச மண்டலத்திலுள்ள மாட்சிமை என் பாக்கியம் க்றிஸ்து என்னும் நேசமுள்ள ரட்சகர் என் பொக்கிஷம் மோட்ச லோக மோட்ச லோக நன்மையே என் ஆறுதல்.
2. மானிடர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமே நான் என் நெஞ்சை யேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் ஆஸ்தி போகும் ஆஸ்தி போகும் நீரோ என்றும் நிற்கிறீர்.
3. க்றிஸ்துவால் எனக்குயர்ந்த ஆஸ்திகள் உண்டாயிற்று விக்கினங்களால் நிறைந்த லோக ஆஸ்தி எதுக்கு? க்றிஸ்து நாதர் க்றிஸ்து நாதர் என்றுமுள்ள பொக்கிஷம்.
4. அந்த மோட்ச மண்டலத்தில் நான் என் பங்கடையவே நீர்தான் இவ் வனாந்தரத்தில் நீங்கிடாச் சகாயரே நான் என்றைக்கும் நான் என்றைக்கும் உம்முடன் இருப்பேனே.