மெய்யான திராட்சச்செடி
meyyaana thiraatsacchedi
மெய்யான திராட்சச்செடி நீரே உம்மில் கொடியாக படர்ந்திடுவேன் நானே -2
உம் வார்த்தை என்னிலும் என் வாழ்க்கை உம்மிலும் நிலைத்திட பெலன் தாருமே உம்மையே சார்ந்து நான் உண்மையாய் ஜீவிக்க உள்ளத்தில் பெலன் தாருமே -2
கிளைகள் நறுக்கி களைகள் பிடுங்கி என்னை நீர் சுத்தம் பண்ணனும் வசனத்தால் போஷித்து ஆவியால் நிரப்பி செழித்து வளர செய்யணும் -2
கனிகளை தேடி தோட்டத்து எஜமான் வருகின்ற அந்நாளிலே மிகுந்த பலன் கண்டு என்னில் மகிழுந்து அணைத்து முத்தம் செய்யணும் -2