மேய்ப்பனின் குரல் கேட்கும்
meyppanin kural ketkum
மேய்ப்பனின் குரல் கேட்கும் சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே அழுகையின் குரல் கேட்டு என்னை தேடி வந்தார் இயேசுராஜன்
புதரிலே சிக்குண்டேனே பயந்து நான் நடுங்கினேனே அழைத்தார் என்னை அன்றே அன்பரின் குரல் கேட்டேன்
கீழ்ப்படியாமல் ஓர் நாள் ஓடி ஓடி ஒளிந்தேனே தேடிவந்து என்னைப் பிடித்தார் தற்பரன் இயேசு ராஜன்
ஓநாய் ஓர் நாள் என்னை பின் தொடர்ந்து முன்வந்ததே விலக்க என் கோலுமானார் - என்னை விடுவிக்கும் தடியுமானார்
அன்பரின் குரல் கேட்ட நல்ல ஆட்டுக்குட்டியாம் நானே அடங்கி நடப்பேனே அவர் தோளில் இருப்பனே