மெய் வழி நீரே யேசுவே
mey vazhi neerae yesuvae
1. மெய் வழி நீரே யேசுவே! நீர் பாவ நாசராம் பிதாவிடத்தில் சேர்வதே உமதிரக்கமாம்.
2. சத்தியம் நீரே ஆகையால் உம் வாக்கு ஞானமே என் நெஞ்சில் அதின் ஜோதியால் வெளிச்சம் தோன்றுமே.
3. நீரே என் ஜீவன் உம்மிலே பிழைத்தசைகிறேன் உமக்கு ப்ரியமாகவே நடந்து கொள்ளுவேன்.
4. நீரே வழியும் சத்யமும் ஜீவனும் ஆனவர் உம்மையே நம்பும் யாவரும் பிழைத்து வாழுவர்.