மேசியா யேசு ராஜன் மேகமீதில் வருவார்
mesiyaa yesu raajan megameedhil varuvaar
மேசியா யேசு ராஜன் மேகமீதில் வருவார் மேதினியைப் படைத்தவர் -ஆ ஆ.
அந்தரத்தோர்கள் கூடி - ஆனந்த கீதம் பாடி அண்ணல் யேசு வருவார் அனந்தங் கோடித் தூதர் சூழ வருவார் - ஆ ஆ
1. அண்டம் நடுங்கிட - இம்மண்டலந்தான் குலுங்க பாவிகள் தம்மைத் தொலைக்க பரிசுத்தவான் சேயரைத் தம்மிடம் அழைக்க
2. ஆதி அந்தமில்லாதோன் - அன்பர்க் கிரக்க முள்ளோன் ஆதரை மீதில் வந்தவர் அடியாருக்காய் பாடு மிக அடைந்தவர்.
3. எக்காளத் தொனியுடன் ஏக முழக்கத்துடன் என்னேசு நாதர் வருவார் அவரின் மக்களெல்லோரும் களிகூருவார்.
4. சண்டாளத்தை விடுத்து - சந்தோஷமாயிருக்க சாதனை செய்யச் சொல்லுதே திருவசனம் சன்மார்க்கம் சொல்ல விள்ளுதே.