மேசியா இதோ சமீபம் என்றோர்
mesiyaa idho sameebam endror
1. மேசியா இதோ சமீபம் என்றோர் சத்தம் கேளுங்கள் வெளிச்சத்தின் பி;ள்ளைகளே ராவின் கனா நீக்குங்கள்.
2. இவ்வெச்சரிப்பால் விழித்து லோக பாசம் விடுங்கள் பாவ நாசர் மேசியாவின் வருகையைப் பாருங்கள்.
3. எதிர் பார்த்த கிறிஸ்து நாதர் மன்னிப்பீய வந்தாரே அந்த மன்னிப்பை அடைய கண்ணீரோடு சேர்வோமே.
4. மாட்சியோடு வரும்போது பாரிலுள்ளோர் அஞ்சுவார் அவர் அன்பாம் கேடகத்தால் தாசர் தம்மை மறைப்பார்.
5. தேவ சுதன் மகா ராஜா உலகின் ரட்சகர்க்கே கனம் பலம் மாட்சி புகழ் நித்ய காலம் ஆகவே.