மேற்கு முதல்
merku mudhal
மேற்கு முதல் கிழக்கு வரை இடைவெளியின் தூரமே அளவில்லாத கிருபையே - ஆஹா விண்முதலாய் மண் வரையில் நடுவிலுள்ள தூரமே வரம்பில்லாத கிருபையே கடவுளின் மகா கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே
1.கிறிஸ்துவுடன் தேவன் தரும் யாவுமே கிருபையே கல்வாரியின் மேட்டினில் விளைந்து கனிந்த கிருபையே இரட்சிப்பின் ஆரம்பம் முடிவுமட்டும் தொடருமே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
2.காலைதோறும் உதயமாகும் புத்தம் புது கிருபையே போதும் என்று சொன்னாலும் கரை புரளும் கிருபையே ஆழியாய் பொங்கிடுமே அமிழ்தமே கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
3.நிற்பதும் நிலைப்பதும் நித்தியரின் கிருபையே மோசம் போக ஒட்டாமல் காக்கும் வல்ல கிருபையே உன்னதம் சேர்த்திடும் விண்கலமே கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
4.தாழ்மை உள்ளம் வாசம் செய்யும் விண்ணரசே கிருபையே பகிர்ந்தளிக்கும் குறைந்திடாத ஊற்றுநீர் கிருபையே தேவனண்டை நிலைவரமாய் நிற்க வைக்கும் கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே!