மேன்மை பாராட்டுவேன்
menmai paaraattuven
மேன்மை பாராட்டுவேன் நான் மேன்மை பாராட்டவேனே - 2 இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன் - என் இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன்
சிலுவை எந்தன் மேன்மை சிலுவை எந்தன் அடைக்கலம் - 2 ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
1. சிலுவையில் அரையுண்டேன் நான் சிலுவையில் அரையுண்டேன் - இனி நானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன்
2. சிலுவையை சுமந்திடுவேன் நான் சிலுவையை சுமந்திடுவேன் - இனி இயேசுவின் மகிமைக்காய் நானே என்றும் பாடுகள் சகித்திடுவேன்