மேலோகத்தை நாடுகிறோம்
melogathai naadugirom
1. மேலோகத்தை நாடுகிறோம் அதன் ஜோதி ப்ரகாசத்தை பேரின்பத்தை வர்ணிக்கிறோம் பார்த்தால் என்னமாயிருக்கும்! பொன் வீதியின் மாட்சியையும் அதன் வச்ரக்கல் மதிலையும் மா மேன்மையாய் வர்ணிக்கிறோம்! சேர்ந்தால் என்னமாயிருக்கும்!
2. எப்பாவமும் இல்லாமல்போம் கண்ணீர் சஞ்சலம் சோதனை யாவையும் வெற்றி சிறப்போம் சேர்ந்தால் என்னமாயிருக்கும்! அங்கே யேசுவைச் சேவிப்போம் வெண் வஸ்திரந்தான் தரிப்போம் வானோர் சங்கம் சேர்ந்திடுவோம் சேர்ந்தால் என்னமாயிருக்கும்!
3. அழியாமையை அடைந்து அவர் சாயலை அணிந்து மா சீக்கிரம் போய் நாங்களும் சேர்ந்தால் என்னமாயிருக்கும்! கர்த்தாவே எம் யாவரையும் மோட்ச பாத்திரராக்கிவிடும் எம் அன்பரும் எம்முடனே சேர்ந்தால் என்னமாயிருக்கும்!