மேலோக வரலாறு சொல்ல வாஞ்சிக்கிறேன்
meloga varalaaru solla vaanjikkiren
1. மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன் இயேசுவும் மகிமையும் கிறிஸ்துவும் உள்ளன்பும் மெய்யென்று அறிவேன் நான் சொல்ல ஆசிக்கின்றேன் என் ஆவல் பூர்த்தியாகும் நேசர் மா அன்பினால்
மண்ணில் என் வாஞ்சை இயேசு, வரலாறு சொல்வதே விண்ணில் இயேசுவும் அன்பும், பாடும் பொருள் என்றும்
2. அற்புத தெய்வ செய்தி சொல்ல வாஞ்சிக்கிறேன் கனவு நினைவிற்கும் எட்டா அதிசயம் நான் பெற்ற நன்மை பல, சொல்ல ஆசிக்கின்றேன் இந்த நன்மைக்காகவே, இதொன்றே உன் தேவை.
3. சொல்ல சொல்ல இன்பமே, தெவிட்டாத வாஞ்சை, சொல்லும் போதெல்லாம் இன்பம் அதிசய அன்பு; ஆத்ம ரட்சிப்பின் செய்தி பலர் கேட்டதில்லை வேத தூய சத்தியம் சொல்ல வாஞ்சிக்கிறேன்