மேலானவரே என்அருகில் இருப்பதால்
melaanavarae enarugil iruppadhaal
மேலானவரே-என் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை அவர் நடத்தி செல்கின்றார்-2
ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2
1.அகதி இல்லை ஒருநாளும் குடியுரிமை தந்திட்டார் அடிமை இல்லை ஒருபோதும் பிள்ளையாக மாற்றினார்-2
திரு இரத்தத்தால் மீண்டும் என்னை பிறக்க செய்தார் அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை வாழ செய்தார்
2.தடைகள் இல்லை ஒருநாளும் வெற்றிகளை தந்தாரே தளரவில்லை ஒருபோதும் பெலன் எனக்கு தந்தாரே-2
வானில் தூதர் சேனையோடு இறங்கி வருவார் என்றென்றுமாய் இயேசுவோடு சேர்ந்து வாழ்வேன்