மேல் நோக்கி முன்னேறுகின்றேன்
mel nokki munnerugindren
1. மேல் நோக்கி முன்னேறுகின்றேன் ஒவ்வோரு நாளிலும் நான் இன்னும் மேல் நோக்கிச் சென்றிட ஜெபித்துக் கொண்டேயிருப்பேன்.
தூக்கிடுமே நான் நிற்பேனே உம்மீது நம்பிக்கையிலே உயர்ந்த ஸ்தலத்திலே எந்தன் கால்கள் நிலைநிறுத்துமே.
2. சந்தேகப் புயல் வேளையில் எனக்குப் பயமேயில்லை அநேகர் அதில் மூழ்கினும் உயர்ந்த ஸ்தலம் என் நோக்கம்.
3. சாத்தான் என்னைச் சோதித்தாலும் உலகத்தை வெற்றி கொள்வேன் உயர் ஸ்தலத்தின் பாடல்கள் என்னை நிலை நிறுத்துதெ.
4. மகிமை ப்ரகாசக் காட்சி காண்பதே எனது வாஞ்சை நான் மோட்சம் அடையும் வரை கர்த்தாவே என்னை நடத்தும்.