மேகங்கள் நடுவில் இயேசு மகா ராஜன்
megangal naduvil yesu magaa raajan
மேகங்கள் நடுவில் இயேசு மகா ராஜன் வானதூதர் சேனையுடன் - வேகமுடன் அவர் வந்திடுவார் - ராஜன்
1. மத்திய வானத்திலே அத்தன் வரும் வேளையில் சுத்தனாய் நீ உத்தமனை சந்திக்க இன்று நீ ஆயத்தமா?
2. குத்தினார் யாவரும் கர்த்தர் வரும் நேரத்தில் கண்களால் கண்டிடுவார் கண்ணீருடன் அவர் கதறிடுவார்
3. தேவதூதர் கரத்தில் கோபகலசம் அதோ ஊற்றப்படும் நாள் முன்னமே நாதனை சந்திக்க ஆயத்தமா?
4. கர்த்தருக்குள் மறுத்த சித்தர்கள் அனைவருமே இமைபொழுதில் வல்லமையாய் கல்லறை விட்டவர் எழும்பிடுவார்
5. மறுரூபமாகிடவே மகிமையடைந்திடவே தெய்வீகம் ஜொலித்திடவே வெண்மேகம் மறைந்தே ஏகிடுவேன்
6. மணவாளன் இயேசுவின் மணவாட்டி யும் சேர்ந்து அரசாளவே வீற்றிருக்கும் அவ்வின்ப நாளிதோ வந்திடுதே
7. தேவசித்தம் செய்துமே ஜீவனை ஊற்றினோர்க்கே ஜீவ கிரீடம் ஈந்திடவே ஜெய வேந்தனாம் இயேசு வந்திடுவார்