மேகங்கள் நடுவே வருவார்
megangal naduvae varuvaar
மேகங்கள் நடுவே வருவார் ராஜாதி ராஜனாய் வருவார் --(2)
பாடுங்களேன் வாழ்த்துங்களேன் இயேசு ராஜாவை போற்றுங்களேன் --(2)
இரட்சகராக வந்தாரே இப்போ நியாயாதிபதியாக வருவாரே --(2) மானிடனே நீயும் மனந்திரும்பு இன்றே உனக்கு இரட்சண்ய நாள் --(2)
பூமியில் அதிர்ச்சி உண்டாகுதே கடலின் சீற்றம் பெரிதானதே --(2) இயேசு சொன்ன வார்த்தைகளும் கடைசி நாட்களில் நிறைவேறுவதே--(2)
இயேசு ராஜனின் வருகையிலே நீ எங்கே நிற்பாய் சகோதரனே --(2) நித்திய நித்திய காலமாக அவருடன் சென்று வாழ்ந்திடலாம்--(2)