மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே
megameedhil yesu raajan vegam vaaraarae
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் (பரலோகம்) சேர்க்க அவரே வாராரே
1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேகமீதில்
2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே (மறுரூபமாவாரே) – மேகமீதில்
3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில்
4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் – மேகமீதில்
5. ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் அதை அறிவிக்கின்றதே அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம் அதையே அறிவிக்கின்றார் – மேகமீதில்
6. ஆயிர வருடம் ஆளுகை செய்வார் ஆண்டவார் இயேசு தாமே நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில்
7. அல்லேலூயா கீதமே பாடி அகமகிழ்ந்தாடிடுவோம் வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C