மேகமீதில் இயேசு
megameedhil yesu
1. மேகமீதில் இயேசு தோன்றிடுவான் மாசற்ற சுத்தரையே தம்முடன் சேர்க்க ஏகமாய் இணைந்தொன்றாய் நினைத்தாயோ வேகமாய் சுத்தாங்கம் செய்திடுவோம்
ஆசை மணாளன் இயேசுவைக் காண்பேனே ஆனந்த நாளில் என் உள்ளம் பொங்குதே நேசித்து சேவிப்பேன் நித்திய நித்தியமாய் ஆனந்தமே பரமானந்தமே
2. எண்ணில் ஆரம்பித்த நற்கிரியை இயேசுவின் நாள் வரை முடிய நடத்தும் துப்புரவு உண்மையுமாய் பரிசுத்தமாய் தப்பற ஜீவிக்க தயை கூர் - ஆசை
3. சாலேமின் இராஜனே காத்திடும் என்னை கிறிஸ்தேசு பிரசன்னமாகும் வரையிலும் ஆவி ஆத்மா சரீரம் பழுதற்ற தாய் ஆவியே என்னும் சுத்தம் செய்யும் - ஆசை
4. பூர்வ காலம் போல புதுமையாக்கம் பூரணர் இயேசுவே நீர் வேகம் வருவீர் ஆவியின் வரங்கள் குறைவற்றோனாய் "ஆமென் வாரும்” என் அருள் தாரும் - ஆசை
5. சோபித்திலங்கிடும் சாலேம் சீயோனில் சீயோனின் ராஜனாய் சிறந்திலங்குவீர் ஜெயித்து சிங்காசனம் அடைந்திடவே ஜெபித்து நித்தமும் போராடுவேன் - ஆசை