மேகம் போன்ற சாட்சிகளே
megam pondra saatsigalae
மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே - 1 இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே - 2 உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் - 2
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே - 1
1. முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே பார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே - 1 நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே - 2 உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே - 2
2. சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே பாகாலை வெட்கப்படுத்தி சவாலை வென்றவனே - 1 கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி - 2 இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே - 2