மேகம் போல் திரள் சாட்சிகள்
megam pol thiral saatsigal
மேகம் போல் திரள் சாட்சிகள் - வாழ்ந்திடவே ஏகமாய் ஓட்டம் தொடர்வோம் ஏகனாம் இயேசுவை எண்ணி ஏகோபித்த ஏகிடுவேன் சீயோன்புரம் நோக்கி நாம்
1. ஆதியும் அந்தமும் இயேசுவல்லோ நீதியும் நிறைவு இவரல்லோ எம் விசுவாசந்தனையே - தம்மில் மென்மேலும் பெருகச் செய்வார்
2. பாவங்கள் பாரங்களையும் - பின் தள்ளி பாரினில் சீராய் செல்லுவோம் பாடுகள் சகித்த இயேசுவைப் பார்த்து மே பதறாதே ஏகிடுவேன் அந்தம் வரை - ஆதி
3. ஓட்டம் பிடித்த தமது - சுதந்திர தோட்டம் தனையே பெறவே கூட்டமாய் சுத்தரே காத்து நிற்கிறேன் நாட்டமுடன் நாடு நாமும் சேருவோம் - ஆதி
4. மா விசுவாச வழியே - திறந்தவர் மாசில்லா மார்க்கம் ஓடவே மா திடனுடனே மகிமை சேரவே. மாநிலமே மறந்தும் ஓட்டுவோம் - ஆதி
5. சீயோன் எருசலேம் - பணித்தவர் சேர்த்திட வேகம் வருவார் சேர்ந்திடும் உள்ளங்கள் உணர்ந்து எழும்ப சேர்ந்து சேவை செய்திடவே வந்திடுவீர் - ஆதி