மீட்பரின் சத்தம் என் நேசரின்
meetparin satham en nesarin
மீட்பரின் சத்தம் என் நேசரின்சத்தம் மேகத்தின்மீது வருவேனென்றார் எக்காளம் முழுங்கிடும் வேளையில் தான் தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார்
அவர் வரும் வேளையை அறிந்திடாமல் அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல் அழுது புலம்பி திரிகின்றாரே
உலக கவலை மதியீனத்தால் உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே உன்னதர் இயேசுவை நேசியாமல் உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே
உன்னை நேசிக்கும் அன்பர் உண்டு இயேசு என்னும் நேசர் உண்டு நம் உள்ளத்தை அவரண்டை தந்திடின்ற உண்மையாய் நித்திய ஜீவனுண்டு