மீட்பரின் பந்தியை நாம் சுற்றி
meetparin pandhiyai naam sutri
1. மீட்பரின் பந்தியை நாம் சுற்றி மா விருந்துண்ண வருவோம் அவர் வார்த்தையைக் கைக்கொள்வோம் ஆண்டவர் வரும் வரையும்.
2. "ஆண்டவர் சொல்வதைக் கேளாய் இதைச் செய்வீர் என் நினைவில் என் காயம் துன்பம் அறிவீர் நான் வரும் காலம் வரையும்".
3. தோட்டத்தில் ஜெபம் செய்தவர் சிலுவையில் தலை சாய்த்தவர் அவர் சொன்னதைப் பற்றுவோம் ஆண்டவர் வரும் வரையும்.
4. இச் சரீர வாழ்வு நீத்து இப் பந்தியை விட்டகன்றும் அவரோடு சேர்வோம் ஒன்றாய் மீட்பர் இங்கே வரும்போது.