மீட்பரே உம்மைப் பின்செல்ல
meetparae ummaip pinjella
மீட்பரே உம்மைப் பின்செல்ல சிலுவையை எடுத்தேன் ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன்
உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நான் நிற்பேன்
பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி மேன்மை லோகம் அனைத்தும் அற்ப குப்பை என்று எண்ணி வெறுத்தேனே முற்றிலும்
மெய்தான்லோகத்தார் பகைப்பார் உம்மை முன் பகைத்தாரே லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் விடீரே உம்மை
சர்வ வல்ல தேவன் அன்பாய் திடன் செய்வார் முன்செல்வேன் தேவ துரோகிகள் மா வம்பாய் சீறினாலும் நான் வெல்வேன்