மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
meetpar yesu kurusil thonginaarae
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்
இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான் என் பாவ பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்
தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ – அவர்
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம் நாவுகள் போதுமோ – பதினாயிரம்
பாவ பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ
கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே – என்றும்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal