மீட்பர் மரித்த குருசண்டை
meetpar maritha kurusandai
1. மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டையில் ரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன் மீட்பரே வாழ்க.
மீட்பருக்கு மகிமை (2) இப்போ என் உள்ளம் மாறிற்று மீட்பரே வாழ்க.
2. ஆச்சர்யம் உள்ளம் மாறிற்று யேசுவின் மாளிகை ஆயிற்று சிலுவை அண்டை உண்டாயி;ற்று மீட்பரே வாழ்க.
3. பாவம் போக்கும் மகத்வ நதி என்னைச் சொஸ்தம் செய்வித்த நதி யேசுவால் அடைந்தேன் இந்த ஸ்திதி. மீட்பரே வாழ்க.
4. இந்த ஜீவ ஊற்றண்டை வா மீட்பருக்கு உன் இதயத்தைத் தா மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா மீட்பரே வாழ்க.