மீண்டும் வருவேன் நான்
meendum varuven naan
1. மீண்டும் வருவேன் நான் என்று வாக்குரைத்தவர் எப்போ வருவீர் நீர் எப்போ வருவீர் மகிமையில் இயேசுவே நீர் வெளிப்படும் நாளில் மகிழ்வுடன் உன் வதனம் தரிசிப்பேன்
மீட்பின் முகம் காணுவேன் - அன்று
ஜெயத்தின் கீதம் பாடுவேன் அல்லல்கள் நீங்கி நான் அன்பர் இயேசுவின் ஆளுவேன் நித்ய நித்தியமாய்
2. ஆரவாரத்துடன் கர்தர் தாமே வானத்தில் காத்திடும் ஜெயாளிகட்காய் வருவீர் ஆவியால் பாவம் லோகம் சாத்தானை ஜெயித்த ஆவலாய் காத்திட உம் பெலன் ஈயுமே - மீட்பரின்
3. பிரதான தூதன் சத்தத்தோடு வான்மீதிலே பிராமணரைச் சேர்க்க வந்திடும் வேளை. மகிமையின் சுவிசேஷத்தில் உந்தன் சாயலாய் மாறியே உம்மைச் சீர் அருள் புரியும் - மீட்பரின்
4. தேவ எக்காள த் தொனியில் வானத்தில் சுத்தரைச் சேர்க்க நீர் வரும் நேரத்தில் திருவசனத்தினாலும் ஆவியினாலும் மறுரூபம் அடைந்திட காத்திருப்பேன் - மீட்பரின்
5. சீயோன் மணாளா நியமித்தார் என் சிந்தையில் நித்திய விவாகத்திற்கென்றென்னையும் நித்திய மணவாட்டியாய் உம்மோடிசைந்து நித்திய காலமாக சுகித்திருப்பேன் - மீட்பரின்