மற்றோர்க்காய் வைக்க ஐயா
matrorkkaay vaikka aiyaa
மற்றோர்க்காய் வைக்க ஐயா - என் ஜீவனை
1. அற்பன் நான் ஆயினும் சொற்படி செய்யவே தற்பரா வாரானை - இந்நேரமே - மற்
2. அங்கம் முழுவதும் தங்கமே உமக்காக எங்கும் பலியாக - என்னை - மற்
3. உப்பை போலாகவே எப்போதும் சாக தப்பாமல் வைத்திடுமேன் - அப்பனே - மற்
4. அஞ்சிடுமிந்நேரம் கெஞ்சுதலைக் கேளும் தஞ்சமும் நீர் தானையா - தாசன் - மற்
5. நன்மையைப் பெறும் நானும் தீமையும் உமக்காய் அன்பாக தாங்கிடேனோ? - அன்னையே - மற்
6. தியாகா என் பலியே திவ்யா நின் அடியே மெய்யாய் நான் பின் செல்லவே - துய்யனே - மற்