மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து
mathiya paanathil miga nithiyam karuthu
மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து வைக்கும் மானிடரே கேளீர். புத்தி உமக்குண்டானால் தெளிந்து குடியும் சும்மா.
1. பாம்பை மடியில் வைப்பாரோ? பழகினாலும் பயமின்றி அதை மொய்ப்பரோ? வேம்பு கசப்பில் என்பாரோ? - மது குடிக்க விரும்புகின்றீர் நல்லதோ? நாம் பிசகோம் என்றும் நடந்து திரிவோம் என்றும் வீம்புகள் சொல்வதேன்? விழுவீர் விழுவீர் காணும்.
2. கைப்பொருள் இழந்திடவும் - புதல்வரோடு காதலி அழுந்திடவும் மெய்ப்பொருள் மறைந்திடவும் எரி நரகில் வீழ்ந்ததில் உறைந்திடவும் தற்பரன் அருள் இங்கு தான் இழக்கவும் வேண்டின் எப்படியும் குடியும் இளைத்துச் சுணங்கிக் கொண்டு.