மறுரூபம் மறுரூபம் மறுரூபமே
maruroobam maruroobam maruroobamae
மறுரூபம் மறுரூபம் மறுரூபமே மகிமையானதோர்அனுபவமே மாம்சசாயல் முற்றும் மாறிடுமே மகிபனின் சாயல் வந்திடுமே
எங்கள் தேவனே இயேசு ராஜனே என்னை ஆட்கொண்டே தெய்வமே இந்த நாளிலே இந்த வேளையிலே என்னை மறுரூபமாக்கிட வாருமே
எழுப்புதல் மேகம் எழும்ப செய்வது கருத்தான ஜெபத்தின் மறுரூபம் ஆத்தும் பார்த்தால் மன்றாடி ஜெபிப்பது உத்தம கிறிஸ்தவனின் மறுரூபம்
சங்கீதங்கள் பாடிஉணர்வுள்ள உள்ளத்தால் ஆவியில் நிறைவது மறுரூபம் - சமயம் வாய்த்தாலும் வாய்க்காமல் போனாலும் சாட்சி பகிர்வது மறுரூபம்
சின்னஞ்சிறு தவறோரகசிய பாவமோ செய்யாமல் இருப்பது மறுரூபம் சிந்தனையில் பரிசுத்தம்காத்துக்கொள்வதே தனிப்பட்ட வாழ்வின் மறுரூபம்
காண்போர் வியந்திட அனுதின வாழ்வில் அன்பினை காட்டுவது மறுரூபம் துரோகம் செய்தவனை சிநேகிதன் என்பது சமுதாயம் போற்றும் மறுரூபம்