மறுபடியும் மறுபடியும்
marubadiyum marubadiyum
மறுபடியும் மறுபடியும் விழுகிறேன் மன்னியும் மன்னியும் இயேசுவே - 2 நெரிந்த நாணலைப்போல நானுமானேன் முறியாமல் காத்திடும் தெய்வமே மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே அணையாமல் காத்திடும் தெய்வமே
உம்மோடு இணைந்து நான் வாழாமல் போனதால் முறிந்தோடி அழிந்து போகிறேன் -2 உம்முடன் இனணந்திட வந்து நிற்கிறேன் கண் பாரும் அன்பின் தெய்வமே -2
இருளோடு வாழ நான் உம்மை விட்டுப் போனதால் ஒளியின்றி அணைந்து போகிறேன் -2 ஜோதியில் சேர்ந்திட வந்து நிற்கிறேன் அணல் மூட்டும் அன்பின் தெய்வமே -2
மறுபடியும் மறுபடியும் விழுகிறேன் மன்னியும் மன்னியும் இயேசுவே - 2 நெரிந்த நாணலைப்போல் என் வாழ்வுமானதே முறியாமல் காத்திடும் தெய்வமே மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே அணையாமல் காத்திடும் தெய்வமே