மரித்தும் உயிர்த்தவர்
marithum uyirthavar
மரித்தும் உயிர்த்தவர் மரணத்தை ஜெயித்தவர் மனிதரின் மீட்பிற்காய் ஜீவனை தந்தவர்
பல்லவி
நீர்தான் இயேசுவே - 4
சர்வ வல்லவர் சிலுவையில் சாத்தானை வென்றவர் சத்தியமானவர் ஆமென் சாவாமை உள்ளவர்
பல்லவி
நீர்தான் இயேசுவே - 4
ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவும் இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
பல்லவி
நீர்தான் இயேசுவே - 4
அனைத்தையும் படைத்தவர் இந்த அகிலத்தை ஆள்பவர் நீதியின் சூரியன் நிகரே இல்லாதவர்
நீர்தான் இயேசுவே - 4 (2)