மரித்தாரே உனக்காக
marithaarae unakkaaga
1. மரித்தாரே உனக்காக குருசில் ருசித்தார் மரணத்தின் கொடுமை முறிப்பாரே வரும் நோய்கள் விலங்குன்னில் அறவே கிறிஸ்தேசு ஜெய வேந்தரே
வல்லமையுண்டே மிக அதிகாரமுண்டு வல்லவர் வார்த்தையுயிர்ப்பித்திடுமே
2. குணமாக்கி கொடும் பேய்கள் அகற்றி ரணமாற கடுங்காயங் கழுவி நின் முள் ததுவாக்கும் ஆத்தும் மதனை பணமின்றி விலையின்றியே - வல்ல
3. இரையாது இருந்திடுவென்றே திரையாழி யது நோக்கி மொழிந்த அதிகாரம் மிக கொண்ட அவர் வார்த்தையானது விதை நீக்கி வலி போக்கும் - வல்ல
4. விசுவாசித்தால் இன்றே காண்பாய் விலையேறும் மகிமையின் செயல் இலையேதும் அவரால் இயலாத கிரியை மலையாதே சரணாகுவாய் - வல்ல
5. உருவேதும் ஒருபோதும் மறைய திருவார்த்தை பிழைப்பூட்டும் உனையே . வருவாயே பரனேசு திருப்பாதம் விரைந்தே தருவாரே ஜெய முற்றுமே - வல்ல