மறப்பேனோ நான்
marappeno naan
மறப்பேனோ நான் எனக்காயுயிர் கொடுத்தீர் - மகிமை தேவா
நாதனுமையே ஜீவதேவா - 2 கருத்துடன் துதிப்பேன் - அரசே
1.அடிமையானீர் - பாவ அடிமைத்தனத்தில் மடிந்த எனக்காய் விடுவித்தீரே கிரயம் கொடுத்து 2 துதிப்பேனே உமையே தேவா அடி
2. அன்னியனானீர்-உமக் கன்னியன் எனையே சொந்தமதாக்க - அன்னி கன்னிமரியில் காயம் எடுத்த 2 மன்னவா உமையே துதிக்க
3.நிந்தை சகித்தீர் -நான் தனயன் உமக்கு ஆகிடவே மா! - நிந் சிந்தினீரே உதிரம் எனக்காய் 2 சொந்தம் நான் உமக்கே தேவா
4. தாழ்த்தினீரே - மிகத் தாழ்ந்த எனைநீர் உயர்த்திட உமையே-தாழ் போற்றுவேன் உம்பாதம் பணிந்து 2 கர்த்தரே உமையே தேவா
5.துதிப்பேனே நான் என் அதிபன் உமையே அகமகிழ்வுட னே கதியே தருவாய் இதுவே தருணம் 2 துதிக்கவே உமையே தேவா