மறப்பேனோ நான்
marappeno naan
மறப்பேனோ நான் உனக்காக யுயிர் கொடுத்தேன் மானே! - உனையே
தாய் தன் சேயை மறந்தாலுந்தான் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப்
1. அடியும் சகித்தேன் கொடுமை பாதகர் செய்த கொடிய வேதனையும் - அடி மடியும் போதும் நினைத்தேன் உனை நான் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப்
2. வெறுத்தாரெனையும் வெகுதுரோகமதா யென் நேசமதையும் - வெறு வெறுமையானேன் பாரில் உனக்காய் மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப்
3. பசியும் மறந்தேன் மிகத் தாகமதாய் நான் சோகம் அடைந்தேன் - பசி பாசமுன்னிலே வைத்ததாலே மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப்
4. நினைத்தேன் உனையே எந்தன் உதிரமதை நான் சொரியும் வேளை - நினை அணைப்பேனோ என் அன்பினாலே மறப்பேனோ உன்னை நான் மாதே! - மறப்
5. வருவேன் நான் என அரண்மனை யதி லே சேர்க்க வருவேன் - வரு வாடாதே யென் அன்பே கலாய் மறப்பேனோ உன்னை நான் மாதே! வருவேன் ஒரு - மறப்