மரண நதிவேகமாய்
marana nadhivegamaay
மரண நதிவேகமாய் நம் நடுவில் ஓடுதே ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக்கொள்ளுதே ஐயோ
மாடமாளிகை கூட கோபுரம் எல்லாம் போச்சுதே ஐயோ மாய உடம்பு மண்ணில் போய் புகுந்துகொள்ளுதே
பணத்தைத் தேடி புதைத்ததெல்லாம் பாழாய் போச்சுதே ஐயோ பாடையேறிக் கல்லறைக்குப் பயணமாச்சுதே
சோக்கு நடை சொகுசுநடை எல்லாம் போச்சுதே ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாட்டில் கொண்டுபோகுதே
எம் . ஏ . , பி . ஏ . , எம் . பி . பி . எஸ் எல்லாம் போச்சுதே ஐயோ படிப்புள்ளோரை கல்லறைக்குக் கொண்டு போகுதே