மறைவிடமே என் உறைவிடமே
maraividamae en uraividamae
மறைவிடமே, என் உறைவிடமே நான் நம்பும் என் கேடகமே - 2 இயேசுவே என் ரட்சகர் என்னை காப்பவர் உயர்த்தி வைப்பவர் - 2
1. வழி தெரியாமல் அலைந்த போதெல்லாம் வழி துணையாக என்னை நடத்தி வந்தீர் பெலவீன கால்களை ஸ்திரப்படுத்தி உம் பெலத்தால் என்னை நடக்க செய்தீர் இயேசுவே என் மீட்பரே என் ஆயரே மேய்த்து செல்வீரே - 2
2. மறைவான கண்ணிகள் என்னை சூழ்ந்தபோதும் உம் வசனம் பாதைக்கு வெளிச்சமல்லோ பகலின் வெயிலும் இரவின் நிலவும் சேதப்படுத்தாமல் காத்தீரல்லோ மேகஸ்தம்பமே அக்கினிஸ்தம்பமே இருள் நீக்கும் உலகின் வெளிச்சமே - 2