மறைவிடமாம் எனக்கு
maraividamaam enakku
மறைவிடமாம் எனக்கு இயேசு உண்டு மறைத்திடுவார் என்னை சிறகடியில் மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார் மாறாத இயேசு எந்தன் அருகில் உண்டு – 2
1. அனுதினமும் கிருபையினால் அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2 ஆனந்த ஜீவிய வழியிலென்னை அனுதினமும் அன்பாய் நடத்திடுவார் – 2
2. அழைத்த தெய்வம் உண்மையானவராலோ வழியில்நான் வழி தப்பி போகாவண்ணம் – 2 வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம் வலதுகை பிடித்தென்னை நடத்திடுவார் – 2
3. இதோ வேகம் நான் வானவீதியில் இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2 இன்ப நாதனை நானும் காணும்வண்ணம் இரவும் பகலும் எண்ணி வாழ்ந்திடுவேன் – 2