மனுவேல் மணவாட்டியாகத்
manuvel manavaattiyaagath
மனுவேல் மணவாட்டியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட வளே நீ! வானவர்களும் வாஞ்சையோடு காத்திருக்கும் சுந்தரி!
1. அழகினால் உன் மனதை மயக்கிடாதே மாதே! நீ காத்திடுவாய் ஆதி அன்பை காத்திடுவாய் கதைகள் ஒன்றும் அணுகாது மறைவா எதையும் செய்யாதே மணவாளனின் வருகையில் விழிப்பாய் அவரைக் காணவே - மனு
2. இதயம் என்றும் அவருக்கு, வேறெதையும் விரும்பாதே இப்போ தன்னையே சுத்தம் செய்வாய் இப்போ தன்னையே இராப்பகலா அறியாயே ராஜன் வருவார் வேளையே இனிதான அந்நாளைய தினமும் சிந்தித்திடுவாயே - மனு
3. பார்வை பரனில் மாத்திரம். பரிசுத்தம் உன் நேத்திரம் பங்கம் இல்லாதே, அன்பிலே ஒரு பங்கம் இல்லாதே படபடப்பாய் நடவாதே, பாதையதனில் வழுவாத நீ வாஞ்சிக்கும் நேசர் வருவார், அதுவரை நீ மறைந்திரு - மனு
4. செய்யும் யாவும் அவருக்கே, மெய்யும் மனமும் வைப்பாயே தூய்மையாக என்றென்றுமாய் தூய்மையாக கையின் வேலை யாவுமே துய்யன் பார்க்கச் செய்வாயே மெய்யாகவே உன்னையே அணைப்பார் அந்நாளிலே - மனு
5. பூரணத்தின் சொரூபியாய், புதுமையாம் மணாளியாய் பூரிப்பாய் அன்றே, வானத்திலே பூரிப்பாய் அன்றே புது எருசலேமிலே துலங்குவாள் அந்நாளிலே துதியால் நிறைந்தென்றுமாய் மகிழ்வாய் சந்தோஷமாய் - மனு